பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
தக்கை போன்ற பொருக்கு: ஸ்ட்ரெப்டோமைசஸ் ஸ்காபீஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • தக்கை போன்ற கிழங்கு (பெரிடெம் )அறிகுறியின் பண்புகளாகும்.
  • கிழங்கின் மேற்பரப்பில் ¼ அங்குல துரு போன்ற தோற்றத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட கிழங்கில் சிறிதாக உருவாகிறது.
  • பாதிக்கப்பட்ட கிழங்குகளில் உள்ள புண் வெளிர் பழுப்பு நிறத்திலிருந்து, அடர் பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது.
  • பாதிக்கப்பட்ட திசுக்கள் பூச்சிகளை ஈர்க்கும்.
 
  கிழங்குகளில் உள்ள புண தக்கை போன்ற கிழங்கு பாதிக்கப்பட்ட கிழங்கு குறுக்கு பிரிவில் பாதிக்கப்பட்ட கிழங்கு
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • இது முட்டைக்கோஸ், கேரட், கத்தரிக்காய், வெங்காயம், முள்ளங்கி, கீரை மற்றும் நூல்கோல் தாக்குகிறது.
  • காரண உயிரிகள், மண்ணில் நிலைத்திருந்து ஒவ்வொரு ஆண்டும் பயிர்த் தொற்றுக்குக் காரணமாகிறது.
  • நோயினால் பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, நோய் நீண்ட தூரம் பரவுவதற்குக் காரணமாக உள்ளது.
  • நோய்க்காரணி விலங்குகளின் செரிமான பாதையில் இருந்து மக்கிய தொழு உரத்தின் மூலம் பரவுகிறது.
கட்டுப்படுத்தும் முறை:
  • பொருக்கு இல்லாத விதை உருளைக்கிழங்கை நடுவதன் மூலம் நோய் மற்ற செடிகளுக்குப் பரவாமலும் தாக்காமலும் பாதுகாக்கலாம்.
  • விதைக்கிழங்குகளில் உள்ள நோயை நீக்க, 0.1% மெர்க்குரிக் குளோரைடு கரைசலில் 1.5 மணி நேரமும் அல்லது ஒரு பகுதி ஃபார்மால்டிஹைடு மற்றும் 240 பகுதி தண்ணீரில் 2 மணி நேரம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • நடவு நேரத்தில் மண்ணில் PCNB உதவியால் நோயைக் குறைக்க முடியும்.
  • உருளைக்கிழங்கை நடுவதற்கு முன் இயற்கை உரமிடுதல் மூலம் நோயின் பாதிப்பைக் குறைக்கலாம்.
  • பொதுவான இரங்கு உவர் மண்ணில் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே ஆல்கலைன் உரமான கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டைத் தவிர்க்க வேண்டும்.
Source of Images:
https://apps.rhs.org.uk/Advice/ACEImages//SCN0000150_460601.jpg
http://www.ianrpubs.unl.edu/epublic/live/g1940/build/graphics/g1940-2.jpg
http://www.ianrpubs.unl.edu/epublic/live/g1940/build/graphics/g1940-3.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015